இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர்…

19 June 2020, 6:04 pm
Arrest_updateNews360
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், செங்குன்றம் சுங்கச்சாவடி அருகே போலீசார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் இறங்கி தப்பி ஓடியது.இதையடுத்து அவர்களை போலீசார் துரத்தி ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆவடியை சேர்ந்த கௌதம் என்பதும், கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சாவை தங்களின் சொந்த உபயோகத்திற்கு கொண்டு சென்றதாகவும்,

நுங்கம்பாக்கத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தன்னுடன் பணிபுரிந்து வரும் ஆவடியை சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர் மில்டன் ஆகியோருடன் கஞ்சாவை வாங்கி வந்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து, தப்பி ஓடிய மூன்று பேர் மற்றும் கஞ்சா விற்பனை செய்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.