சோழவரத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது…

27 June 2020, 5:01 pm
Quick Share

திருவள்ளூர்: சோழவரத்தில் வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும்
ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சோழவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மர்ம கும்பல் ஒன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை 3 பேர் வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை போலீசார் கைது விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சதீஷ், பொன்ராஜ் என்பதும், பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை வை பறிமுதல் செய்தனர். மேலும் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்தால் வீட்டின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.