அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் பெஞ்சமின் பேச்சு…

15 February 2020, 5:56 pm
Thiruvallur MInister Speech- updatenews360
Quick Share

திருவள்ளூர்: ஜெயலலிதாவின் பாணியில் முதலமைச்சர் பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக
ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, வேண்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள 18 அரசு பள்ளிகளில் பயிலும் 2459மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், ஆட்சியர் மகேஸ்வரி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் ஊரகதொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பகுதியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியதாகவும், தற்போது அவரது பாணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 34 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும், இதன்மூலம் அரசுப் பள்ளியின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.