வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவர் கைது…

23 May 2020, 10:32 pm
Quick Share

கன்னியாகுமரி: பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உடம்பு, மலைப்பாம்பு, மரநாய் போன்றவற்றை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கு தடை செய்யப்பட்ட குளத்தில் இருவர் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தகவலறிந்த வனத்துறையினர் மாணிக்க ராஜ், சிவகுமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் செல்போனை ஆய்வு செய்த போது, அச்சன்குளத்தை சேர்ந்த தினேஷ், தாவீது என்ற இளைஞரும் சேர்ந்து ஆமை, பாம்பு, உடும்பு, மரநாய் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது அதனுள்ளிருந்து படங்களின் மூலம் தெரியவந்தது. இருவரையும் வனத்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட குளத்தில் மீன் பிடித்த குற்றத்திற்காக மாணிக்கராஜ் – க்கு ரூபாய் 25000 அபராதம் விதித்தனர்.