மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது…

17 June 2020, 8:14 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சென்னை அயப்பாக்கத்தை சார்ந்த சுகுமார் என்பவர் காரில் மதுபானங்களை வாங்கி கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரிடமிருந்து 288 மது பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் அவ்வழியாக வந்த செங்குன்றம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 80 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாளை மறுநாள் முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து மதுபானங்களை வாகனங்களில் வந்து வாங்கிச் செல்கின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மதுபான கடை களிலும் மதுபானங்களை போதிய அளவிற்கு கையிருப்பு விற்பனைக்கு மதுபானங்களை தயாராக வைத்துள்ளனர்.சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக வருபவர்களை போலீசார் தடுப்பதால் அதிக அளவு கிராமப்புற சாலைகளில் வழியாக பயணிப்பதால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களிடமிருந்து மதுபானங்கள் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.