சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது…

23 March 2020, 8:41 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் பீதி அடையும் வகையில் வதந்தி பரப்பிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடுகளின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பீதி அடையும் நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சியில் லோகோவை பயன்படுத்தி வதந்தி பரப்பிய ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் சேர்ந்த பூபாலன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் வாட்ஸ்அப் செயலின் மூலம் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கனேஷ் குண்டாசுக்கு மாவட்ட ஆட்சியாளர் கதிரவனுக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் இது போன்ற மக்கள் பீதி அடையும் வகையில் யாரும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.