இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதை தட்டி கேட்ட நபர் கொலை… 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை…

19 May 2020, 7:15 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதை தட்டி கேட்டவரை கட்டையால் அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமம் பழையகருவாட்சியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நபர்களை ஜெயபால் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் ஜெயபாலுக்கும், இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் கொண்ட கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் கல் மற்றும் உருட்டுகட்டையால் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஜெயபாலை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்து கிழே விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்ககப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழிலேயே ஜெயபால் சிகிச்சை உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று ஜெயபாலை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அன்பு, சரவணன், பாண்டியன் என்பது தெரிய வந்தது. மேலும் தலைமறைவாக உள்ள அருண், ஆனந்தராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.