ஸ்காட் மோரிசனுக்கு டாட்டா : பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு… 31வது பிரதமராகிறார் பிரபல கட்சித் தலைவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 5:57 pm
Scott Morrison Lose -Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார்.

பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Federal Election: The burning questions Anthony Albanese must answer ahead  of poll | The West Australian

ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி 76 சீட்டுகளை பெற்று பெரும்பான்மையுடன் முன்னிலையில் வகிக்கிறது என்றும் ஸ்காட் மோரிசனின் லிபரல் நேஷனல் கூட்டணி 40 சீட்டுகளில் முன்னிலையில் இருப்பதாவும் கூறப்படுகிறது.

இதில் கிட்டத்தட்ட தொழிலாளர் கட்சி வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Views: - 1715

0

0