வசூல் வேட்டையில் ‘பொன்னியின் செல்வன்’.. 7 நாட்களில் இத்தனை கோடியா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
7 October 2022, 10:09 am
Quick Share

தமிழ் சினிமாவே ஆவலுடன் பார்க்கக் காத்துக்கொண்டிருந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியொங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்து கொண்டு இருக்கிறது.

இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த 30 தேதி வெளிவந்த இப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல சாதனைகளைப் படைத்து பிரமாண்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி உள்ளது.

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் உலகளவில் ரூ.340 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ.500 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Views: - 478

1

1