படத்தை பாதியில் நிறுத்திய சூர்யா.? பாலாவுடன் மோதலா.? என்ன சொல்கிறது 2டி நிறுவனம்..?

Author: Rajesh
4 May 2022, 4:13 pm
Quick Share

நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது தான் நந்தா, பிதாமகன், இதனால் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த நிலையில், தான் சூர்யா நடிக்கும் இப்படம் தொடர்பாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகின.

பொதுவாக பாலாவின் படங்களில் பிரச்சனைகள் எழுவது வழக்கம். படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளை கடுமையான வார்த்தைகளால் பேசுவத போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த காரணத்தினால் பாலா-சூர்யா இடையில் நடந்த இந்த பிரச்சனையும், இதுவும் ஒரு வகையில் உண்மைதானோ என பலர் கருதிவந்தனர்.ஆனால் இது உண்மையல்ல எனத் தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்படத்தைத் தயாரித்துவரும் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவன இணை தயாரிப்பாளர் ராஜசேகரின் ட்விட்டர் பதிவு.

அதில், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படம் முழுமூச்சுடன் சிறப்பாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜசேகரின் இப்பதிவு, இப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உலாவந்த ஆதாரமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Views: - 813

0

0