ஜெயிலர் படத்துக்காக ரஜினிகாந்த்-க்கு கிடைக்க போகும் சம்பளம்.. இத்தனை கோடிகளா.? வெளியான தகவல்.!

Author: Rajesh
20 June 2022, 4:21 pm
Quick Share

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. ரத்தம் சொட்டும் கத்தியுடன் மிரட்டலாக இருந்தது ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரை பார்த்து படம் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் படத்தின் போஸ்டர் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இதனிடையே, அண்ணாத்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ரஜினிகாந்த் தனது 169 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதற்காக தனது சம்பளத்தை பாதியாக குறைத்து 50 கோடி ரூபாய் மட்டுமே வாங்குவதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் ஜெயிலர் படத்திக்க நடிகர் ரஜினிகாந்த் 151 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்காத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் முதல் முறையாக 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Views: - 549

2

2