சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்! விலைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

Author: Rajesh
8 June 2022, 3:43 pm
Quick Share

விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் படக்குழுவினர் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து வருகிறார். நேற்று லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சொகுசு காரை கமல் பரிசளித்து இருந்தார். மேலும் துணை இயக்குனர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பைக் பரிசாக கொடுத்தார் கமல்.

இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவை சந்தித்து அவருக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த வாட்சின் மதிப்பு கிட்டத்தட்ட 28 லட்சத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

சூர்யா விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்ததற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 884

2

0