செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு சந்தன கட்டை பார்சல் : பைக்கில் கடத்திய ஒருவர் கைது.. 10 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2022, 2:33 pm
Sandal Wood Smugling -Updatenews360
Quick Share

விழுப்புரம் : கடத்தி வந்த 10 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள தொரவி மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்த கூறிய போது வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னகிருஷ்ணாவை போலீசார் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள ஆயோத்தியாபட்டினம் கிராமத்தை சார்ந்த மலைவாழ் சமூகத்தை சார்ந்த சென்ன கிருஷ்ணா 10 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை துண்டுகளை சாக்கு பையில் மூட்டையாக கட்டி புதுச்சேரிக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தன கட்டை துண்டுகளை கடத்திய சென்ன கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விழுப்புரன் வனத்துறை சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சந்தன கட்டை கடத்தல் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் விசாரனை மேற்கொண்டு சென்ன கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். சந்தன கட்டை கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் குற்றவாளியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 396

0

0