நள்ளிரவில் சசிகலாவின் கார் கண்ணாடி ‘டமால்’.. டோல் பிளாசாவில் குவிந்த ஆதரவாளர்கள் : திடீர் போராட்டத்தால் பரபரப்பு.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 7:48 pm
Sasikala Tol Plaza - Updatenews360
Quick Share

நள்ளிரவில் டோல் பிளாசாவை கடந்து சென்ற போது கார் கண்ணாடி உடைந்ததால் சசிகலாவின் ஆதரவாளர்கள் போராட்டடம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்மீக பயணத்தை சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருச்சி வழியாக தஞ்சைக்கு சென்றுள்ளார். அப்பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் செல்லும்பொழுது 5 கார்களுடன் சென்று உள்ளார். முன்னாள் சென்ற கார் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றுவிட்டது..

அதற்கு பின்னால், சசிகலாவின் கார் சென்றிருக்கிறது. அப்பொழுது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டியுள்ளது. இதை பார்த்ததும் சசிகலாவுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால், தன்னுடைய காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி உள்ளார்.

இதைக் கண்ட ஆதரவாளர்களும் கார்களை அங்கங்கே நிறுத்திவிட்டனர். இதையடுத்து சசிகலா, ஏற்கனவே எனக்கு இதே போல 2 முறை நடந்துள்ளது. இந்த டோல்பிளாசாவில் இது 3வது முறை, வேண்டுமென்றே பழிவாங்க இப்படி செய்கிறீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.. ஆனால், மேனேஜர் அங்கே வராததால் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, மேனேஜர் இப்போதே வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தகவல் கிடைத்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்படாததால் மேனேஜர் வர வேண்டும் என உறுதியாக கூறிவிட்டனர்.

பின்னர் சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டியை சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைத்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி அவர் நடந்த சம்பவத்திற்கு “மன்னிப்பு” கேட்டுள்ளார்.

இது குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கூறினர். சசிகலா தரப்பில் புகார் தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே சமயம், இது குறித்து பேசிய சுங்கச்சாவடி ஊழியர்கள், சசிகலா விஐபி செல்லும் சாலையில் வராமல் நார்மலாக செல்லும் பொது வழியில் வந்ததாகவும், அதனால் தான் பிரச்சனை என கூறியுள்ளனர்.

இது பற்றி சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறும் போது, எப்போது விஐபி வழியை அவர் பயன்படுத்த மாட்டா என்றும், 3வது முறையாக இவ்வாறு நடப்பதால் விவகாரம் முற்றிவிட்டதாகவும், புகார் அளிப்போம் என கூறியுள்ளனர்.

Views: - 513

0

0