பிரபல இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா சீரியல் நடிகை ரச்சிதா.? வெளியான தகவல்.!

Author: Rajesh
19 June 2022, 7:41 pm
Rachitha-Mahalakshmi-updatenews360-2
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் இருந்து மீனாட்சியாக நடித்து வந்தவர் ரச்சிதா.

அந்த சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா விஜய்யில் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். பின் சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என வெளியேறினார். தற்போது கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை ரச்சிதா தன்னுடைய முதல் தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்தது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் இப்போது அவர்களது திருமண வாழ்க்கை பிரச்சனையில் முடிய விவாகரத்து வரை சென்றுவிட்டார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் என்றும் ஒரு இயக்குனர் தான் என்ற தகவலும் பரவி வருகிறது. அவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை, இதுவும் காதல் திருமணம் என்கின்றனர்.

Views: - 1238

2

1