ஷோ பற்றி பேசனும் தனி அறைக்கு வா.. பிரபல சேனல் அதிகாரி மீது சீரியல் நடிகை புகார்.!

Author: Rajesh
12 June 2022, 8:56 pm
Quick Share

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நன்கு அறியப்பட்டவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. இவர் சீரியலில் நடித்து புகழ் பெற்றதை விட அண்மைகாலமாக சர்ச்சை கருத்துக்களை பேசி அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம்.

கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தும் பல பதிவுகளையும் போட்டு வருகிறார். சிம்புவை காதலிப்பதாக கூறியது, அதன் பின் சிம்பு வீட்டின் முன்பே சென்று போராட்டம் நடத்தியது என அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தன்னை சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாகவும், தன் நண்பர்கள் தன்னை உபயோகப்படுத்தி கொள்வதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொடர்ந்து அந்த பேட்டியில், ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. அதன் உள்ளே ஆபிஸ் செட்டப் வைத்திருந்தார்கள். அப்போது அந்த நபர் என்னிடம் தவறாக அணுகினார். அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை. என்னை அவரது மடியில் அமர சொன்னார். நானும் பயத்தில் அமர்ந்தேன்.

கீழே என் பிரென்ட் வெயிட் பன்னிட்டு இருக்கார், போகணும் என சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அப்படி பொய் சொல்லி தான் தப்பித்தேன் என ஸ்ரீநிதி அந்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

Views: - 450

0

0