கருட தரிசனம் : மோக்ஷம் அருளும்

2 December 2019, 7:26 pm
grd-updatenews360
Quick Share

காக்கும் கடவுளாக விளங்கக்கூடியவர், மகாவிஷ்ணு. அவரின் வாகனமாக விளங்குபவர் கருட பகவான். கருட பகவான் ‘பெரிய திருவடி’ என்று, புகழப்படுகின்றார். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசித்து, வணங்குபவர்களுக்கு, அவர்களின் தோஷங்கள் முற்றிலுமாக விலகி விடும் என்பது ஐதீகம். வானத்தில் கருடனை தரிசித்ததும், ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா..’ என்று வணங்குவது வழக்கம்.

சனி பகவானின் பலவிதமான தாக்கங்களான, ஏழரைச் சனி காலம், அஷ்டமச் சனி காலம், போன்ற பல பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, கருட பகவானின் விரத வழிபாடு கைகொடுக்கின்றது. நவக் கிரகங்களின் மூலமாக ஏற்படுகின்ற அனைத்து வித தோஷங்களையும், விலக்குபவராக கருடன் திகழ்கின்றார்.

கருட வழிபாட்டுக்கான திதிகளின் பலன்கள்.

வளர் பிறையின் பிரதமையில், கண் திருஷ்டி மற்றும் செய்வினை தோஷங்கள் நீங்கிவிடும். தேய்பிறை பிரதமையில், வறுமை நீங்கிவிடும், குபேர சம்பத்து கிட்டும். வளர்பிறையின் திருதியையில், சந்திர தோஷங்கள் நீங்கிவிடும்.

வளர்பிறை சஷ்டியில், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும். வளர்பிறை சப்தமியில், சூரிய தோஷங்கள் விலகிவிடும். வளர்பிறை சதுர்த்தியில், விநாயகரின் அருளும், ஆசிகளும் கிடைக்க பெறும்.