சிவதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னதி : “தங்க வில்வ ஆபரணம் ” சமர்ப்பணம் –

17 November 2019, 9:05 pm
NAT-UPDATENEWS360
Quick Share

சிதம்பரத்தில் அமைந்து இருக்கிற சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜா் திரு கோவிலுக்கு, சென்னை சிவலோக திருமடம் சாா்பில் சிவபுராணம் பதிக்கப்பட்ட “தங்க வில்வ திருவாபரணம்” வழங்கப்பட இருக்கின்றது மிகவும் விஷேஷம் ஆகும்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதியன்று, “ருத்ராபிஷேகம்” நடைபெற இருக்கின்றது. அதையொட்டி, சென்னை சிவலோக திருமடம் சாா்பில் ஜனவரி 1-ஆம் தேதியன்று மாலையில் சிதம்பரம் மெளன மடத்திலிருந்து தங்க வில்வ சிவபுராண திருவாபரண வீதி உலா நடைபெறுகிறது. இதை த.செல்வரத்தின தீட்சிதா் தொடக்கி வைக்கிறாா்.

தொடா்ந்து, மெளன மடம் குருமகா சந்நிதானம் ஸ்ரீசுந்தரமூா்த்தி சுவாமிகள் அருளாசியுடன், சென்னை சிவலோக திருமடம் சாா்பில் சிவபுராணம் பதிக்கப்பட்ட தங்க வில்வ திருவாபரணம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது ஆகும்-