சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்திகை தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

10 December 2019, 7:08 pm
madurai_car_festival -Updatenews360
Quick Share

திருப்பரங்குன்றம்: கார்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கார்திகை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்திகை திருநாளை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து முன்னிட்டு மலைமேல் உள்ள விநாயகர் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவனியாபுரம், பெருங்குடி , பரம்பு பட்டி, வளையன்குளம், நிலையூர், சம்பகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.