செட்டிகுளம் குபேர பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம்…!
8 November 2019, 7:56 pm
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற செட்டிகுளம் குபேர பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள செட்டிகுளம் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரயாக வேள்வி நடைபெறும். அதன் படி, ஐப்பசி மாத குபேர யாக வேள்வி இன்று நடைபெற்றது. யாக வேள்வியில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு மஹாபூர்னா ஹீதியும் நடைபெற்றது. தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியம், அரிசி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் பங்கேற்று குபேரரை தரிசித்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால், இந்த குபேர யாக வேள்வியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.