திருப்பத்தூர் பழமை வாயந்த் ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

2 December 2019, 8:17 pm
Thiruapthur Kovil- updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் கஸ்பாவில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பாவில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவிலில் உள்ளது. இக்கோவிலை புறனமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது .முன்னதாக கும்பாபிஷேக பூஜைக்காக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் ,விசேஷ மஹா பூர்ணாஹுதி யாத்திரா தானம் நடைபெற்றது. இதையடுத்து அர்ச்சகர்கள் கடம் புறப்பாடு செய்யப்பட்டு மேளதாளத்தோடு ராஜகோபுரம் விமானம், ஸ்ரீ செல்வ விநாயகர், துர்க்கை அம்மன் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

இதையடுத்து மகா அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்