திருவண்ணாமலை திருக்கார்த்திகை உற்சவம் : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா

2 December 2019, 9:11 pm
tvm-updatenews360
Quick Share

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.