பகவான் சத்திய சாய் பாபாவின் 94-ம் பிறந்த நாள் : சத்திய சாய் சேவா சமிதி நவம்பர் 17-ல் கோலாகல கொண்டாட்டம்

16 November 2019, 10:41 am
SAI-UPDATENEWS360
Quick Share

பகவான் சத்ய சாய் பாபாவின், 94-வது பிறந்த நாள் விழாவினையொட்டி, நவம்பர் 17-ம் தேதி, மயிலாப்பூரிலிருந்து சுந்தரம் வரையிலும், ரத உற்சவமானது, நடைபெறவிருக்கின்றது. சத்ய சாய் சேவா சமதியின், சென்னை தலைமையகமான “சுந்தரம்”, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்து இருக்கின்றது.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால், 37 ஆண்டுகளுக்கு முன், “சுந்தரம்”, திறந்து வைக்கப்பட்டது. ஆண்டு தோறும், பகவான் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாள் விழாவானது, விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.

பகவான் சத்திய சாயி பாபாவின், 94-வது பிறந்த நாள் விழாவின் சிறப்பு நிகழாவிற்காக, நவம்பர் 17-ம் தேதி, மயிலாப்பூரில் இருந்து ரத உற்சவமானது நடத்தப்படுகின்றது. மாலை, 4:15 மணி முதல், வேதவிற்பன்னர்களால் வேதம் ஓதப்படுகின்றது. மாலை சரியாக, 5:00 மணிக்கு, செண்டை மேளம், பால விகாஷ் குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க, வேத கோஷ்டியின், இளம் பஜனை கோஷ்டியினருடன், பகவான் சத்ய சாய் பாபாவின் ரதமானது, மயிலாப்பூர், லேடி சிவசாமி பள்ளியிலிருந்து புறப்படுகின்றது.

சத்திய சாய்பாபாவின் பிறந்த நாள்; விழாவின் ரதமானது, தெற்கு மாட வீதி, செயின்ட் மேரி சாலை சந்திப்பு, பில்ராத் மருத்துவமனை சந்திப்பு, கிரீன்வேஸ் சாலை வழியாக, “சுந்தர”த்தை ரதம் வந்தடைகிறது.இரவு, 7:00 மணிக்கு, “சுந்தர”த்தில் பூரண கும்ப மரியாதையுடன், பாபாவின் ரதம் வரவேற்கப்படுகிறது. பின், மங்கள ஆராத்தி நடைபெறவிருக்கின்றது.