ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலின் திருத்தேர் உற்சவம்…!

8 November 2019, 2:04 pm
Rasipuram- updatenews360 (3)
Quick Share

நாமக்கல்: ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலின் திருத்தேர் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து தேரிழுத்தனர்.

இக்கோவிலின் ஆண்டு ஐப்பசி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடியேற்றம், பொங்கல் வைத்தல், தீக்குண்டம் இறங்குதல் போன்றவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதில் முன்னதாக கோவில் அர்ச்சகர்களால் சுவாமி பரிவாரங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்நிலையில் இருந்து திருத்தேர் கவரைத்தெரு, கடைவீதி வழியாக நகரின் முக்கிய விதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்களும், பெண்களும் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.