ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா…!

8 November 2019, 3:44 pm
Temple2 - updatenews360 (3)
Quick Share

கோவை: கோவையில் 400ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை கணுவாய் பகுதியின் மலை அடிவாரத்தில் 400ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது கணுவாய் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களின் சக்தி வாய்ந்த ஒரு கோவிலாக இருந்து வருகிறது. இதை அப்பகுதி கிராம மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் தரிசனம் பெற்று செல்கின்றனர். இதை தொடர்ந்து இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் உடன் ஆரம்பித்த இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழா மகா கணபதி ஹோமம்,மகா அபிஷேகம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. இதன் பின் பல்வேறு கோவில்களில் இருந்து எடுத்து வரபட்ட தீர்த்த குடங்களை கோவில் நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் ஊர்வலமாக எடுத்து கோவில் பரிகாரங்களை சுற்றி வந்தனர். பின்பு சிவாச்சாரியார்களும், ஓதுவாமூர்த்திகளும் வேதங்கள் ஓத, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் ஒலி எழுப்ப கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.