சோமாவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம்! மதுரை மீனாட்சி கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

18 November 2019, 3:05 pm
Madurai Sangu-Updatenews360
Quick Share

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சோமவார விரதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்கிட பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சங்காபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்