உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம்

3 October 2020, 5:00 am
Quick Share

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டும். அவரின் அனுகிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா?

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாக கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்து பயனடையலாம்?

மேஷ ராசி:

செல்வ வளம் பெருகவும், தொழில் மற்றும் வியாபாரம் செழித்து ஓங்கவும், திருமாலின் குறிப்பிட்ட இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால் பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் கேசவாய நம:

ரிஷப ராசி:

வீட்டில் இருக்கும் வறுமை ஒழியவும், செல்வ யோகம் கிட்டவும், வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையவும் வேண்டி திருமாலின் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயனடையலாம்.
இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் நாராயணாய நம:

மிதுன ராசி:

வாழ்கையில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் குறையவும், செல்வ வளம் பெருகவும், நீடித்த வருமானம் கிடைக்கப் பெறவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயனடையலாம்.
இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் மாதவாய நம:

கடக ராசி:

பொருளாதார ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், பண நெருக்கடி காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதன் மூலம் பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் கோவிந்தாய நம:

சிம்ம ராசி:

மன பயம் நீங்கவும், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரவும், தொழில் விருத்தி அடையவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயன் பெறலாம். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் விஷ்ணவே நம:

கன்னி ராசி:

மிகவும் பயனுள்ள மந்திரமாக இந்த மந்திரம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் மதுசூதனாய நம:

துலாம் ராசி:

வேலை, தொழில், வியாபாரம் என்று எல்லாவிதமான வருமானம் தரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பான பலனை தரும். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் த்ரிவிக்ரமாய நம:

விருச்சிக ராசி:

உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கும், குடும்பத்தில் செல்வ வளம் நிறைந்திருக்கவும் வேண்டி தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் வாமநாய நம:

தனுசு ராசி:

இருப்பதை அனுபவிப்பதே பெரிய போராட்டமாக இருந்திருக்கும். உங்களுடைய வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்த மாறி அமைத்துக் கொள்ள இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பலனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் ஸ்ரீதராய நம:

மகர ராசி:

இதுவரை இருந்து வந்த குழப்பமான மனநிலை மாறுவதற்கும், செல்வவளம் செழித்து ஓங்கவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது நலம் தரும். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் ஹ்ருஷிகேசாய நம:

கும்ப ராசி:

இந்த மந்திரம் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிச்சயம் உண்டாக்கும். நீங்கள் வாழ்க்கையில் மேன்மை அடையவும், செல்வ வளம் பெருகும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வரலாம். இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் பத்மநாபாய நம:

மீன ராசி:

பணப்பிரச்சினை ஏற்பட்டாலும், மன சங்கடமான சூழ்நிலை உண்டானாலும், வளமான வாழ்வு அமையவும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம்.
இதோ உங்களுக்கான மந்திரம்:

ஓம் தாமோதராய நம:

Views: - 47

0

0