ஆடி மாதத்தில் கோகுலாஷ்டமி

10 August 2020, 5:00 am
Quick Share

வழக்கமாக கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாதம் அஷ்டமி திதியில் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக வட நாட்டிலும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஆனால் வித்தியாசமாக இந்த ஆண்டு ஆடி மாதமே கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது .எப்படி கடவுளின் பிறந்தநாள் மாதம் மாறும் என்கிற கேள்வி பல ஆன்மீக வாதிகளை அசைத்து இருக்கிறது.

இருந்தாலும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆடி 27 ல் காலை 7.55 முதல் 12 தேதி காலை 9.36 மணி வரை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. எமகண்டம் ,ராகு காலம், குளிகை தவிர்த்து நல்ல நேரங்களில் அபிஷேகம் பூஜை புனஸ்காரம் நடைபெறும்.பஞ்சாங்கத்தில் நல்ல நேரம் காலை7:30 முதல் 8 .00 மணி வரையிலும் மாலை 4.45 முதல் 5.45 வரையிலும் இருக்கிறது .

அதே கௌரி பஞ்சாங்கத்தில் காலை 10.45 முதல் 11.45 மணி வரையிலும் மாலை 7. 30 முதல் 8 .30 வரையிலும் நல்ல நேரம் இருக்கிறது.அதே நேரம் இவர்கள் குறிப்பிடும் நாளில் பரணி நட்சத்திரம் சப்தமி திதி வருகிறது. கிருஷ்ணரின் பிறந்த நாளுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. காலண்டரில் தவறாக குதித்துள்ளனர். உண்மையான கிருஷ்ண ஜெயந்தி 10.9.2020 அன்று வருகிறது. கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்தவர் என்பதால் இரவு பூஜை மிகவும் உகந்தது.

வட இந்தியர்கள் இரவு 12 மணிக்கு சிலைக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள். வெண்ணெய் உட்பட இனிப்பு வகைகள் விதவிதமாக செய்து வழிபாடு செய்வார்கள். கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய் பூஜைக்கு அவசியமான பொருளாகும். வசதி இல்லாதவர்கள் குசேலர் அன்போடு அவல் கொடுத்த வரம் வாங்கியதைப்போல அவல், வெண்ணெய் வழிபாட்டில் வைத்தாலே கிருஷ்ணர் ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் கிருஷ்ணனைப் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடி கொண்டாடுவார்கள். கிருஷ்ணரின் கீதை உபதேசம் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும்.

Views: - 113

0

0