திருப்தி தரும் திண்டல்மலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி

20 January 2021, 5:00 am
Quick Share

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கிலோமிட்டர் தொலைவில் திண்டல்மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுதசாமி கோவிலும் ஒன்று.

இவர் குழந்தை வேலாயுதசுவாமி, குமார வேலாயுதசாமி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெறும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமாரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்று வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து, முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.கொங்கு நாட்டின் ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஒர் அமைப்பு தீபஸ்தம்பத்தை கோவிலின் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும்.

திண்டல்மலையில் இது போன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை திபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.திண்டல் மலைக்கு சென்று திருப்தியாய் வழிபடுவோம்; வாருங்கள்.

Views: - 2

0

0