லிங்காஷ்டகம் : சிவகடாக்ஷம்

6 December 2019, 10:22 am
om-updatenews360
Quick Share

நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்
தூய சொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

காமனை எரித்த பேரெழில் லிங்கம்
இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்
கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்
தட்சணின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்
வந்ததொரு பாவத்தைப் போக்கிடும்லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்
வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்
தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்