வரங்களை அள்ளித்தரும் அத்திவரதர்…! கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருகிறார்…!!

10 December 2019, 12:42 pm
Kanya Atthivarathar- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே அத்திமரத்தில் எட்டரை அடி உயரத்தில் அத்திவரதர் சுவாமி சிலையை வடிவமைத்து சென்னையில் கோவில் ஒன்றில் பிரிதிஸ்டை செய்ய ஆறுபேர்கள் கொண்ட குழு நாகர்கோவிலில் இருந்து புறபட்டு சென்றனர்.

அத்திவரதர் என்றாலே தமிழகத்தில் தெரியாதவர் இருக்க முடியாது. அந்த அளவில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தது வரலாற்று சிறப்பு வாய்ந்த சம்பவம் ஆகும்.

அத்திவரதர் சுவாமியை மக்கள் தரிசனம் பெற வேண்டி சென்னையில் உள்ள ஒரு ஆஸ்ரமம் ஒன்றில் கட்டபட்டு வரும் கோவிலுக்குக்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் அத்தி மரத்தால் சுவாமி சிலை வடிவமைக்கும் பணிகளில் சிற்ப கலைஞர்கள் ஆறு பேர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

சிலை வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து சிறப்பு பூஜைகள் செய்து சென்னைக்கு கொண்டு செல்ல சுவாமி சிலையை சிற்ப கலைஞர்கள் கொண்டு புறப்பட்டனர்.

இது குறித்து சிலை வடிமைபாளர் சந்திர பிரகாஸ் கூறுகையில், முழுக்க முழுக்க அத்தி மரத்தில் உருவாக்க பட்ட இந்த அதிவரதர் சுவாமி சிலை எட்டரை அடி உயரம் கொண்டது என்றும் கொண்டு செல்லும் வழியில் காஞ்சிபுரம் வராதராஜா பெருமாள் கோவிலில் சென்று பூஜைகள் செய்த பின்னர் தான் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.