பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்..!

4 December 2019, 10:06 am
God murugan-updatenews360
Quick Share

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு கடந்த ஆண்டே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேக பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் பாலாலயம் நடைபெற்றது. பாலாலய பிரவேசம், கலாகர்ஷண பூஜைக்கு பின்பு மகாதீபாராதனை நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின.