புண்ணியம் நிறைந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்

27 September 2020, 5:00 am
Quick Share

புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும்.மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள்