சபரிமலை மண்டல பூஜை : நவம்பர் 16-ல் துவக்கம்

9 November 2019, 8:43 am
sabarimala-Ayyappa_UpdateNews360
Quick Share

ஸ்வாமியே சரணம் ஐயப்பா – தத்வமஸி. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திரு கோவில் கார்த்திகை மாத பூஜைகளுக்காக வருகின்ற 16-ம் தேதியன்று கோவில் நடை திறக்கப்படுகின்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையினை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி மாலை 5.00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்னர், மறுநாள் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது.

பூஜையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகின்றது.