ஸ்வாமி ஐயப்பன் அமர்ந்த அரியாசனம் : ஆன்ம ஜோதியின் சிம்மாசனம்

12 December 2019, 10:08 am
as-updatenews360
Quick Share

அரசர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதே வழக்கம். அச்சன் கோவில் தலம் காட்டுக்குள்ளேதான் இருந்தது… அச்சன்கோவில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டுக்கு உள்ளே 12 கிலோ மீட்டர் ஜீப்பில் பயணிக்க வேண்டும்.அப்போது நீங்கள் அடைவது, காசேரபாறா… காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி /இருக்கை என்று அர்த்தம்….

பந்தள ராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப் பால் தேடிச் சென்ற நம் அய்யப்ப சுவாமி இந்த நாற்காலி போன்ற இருக்கை பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தாராம்…

இன்றும் கூட பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் சென்றால், நம் அரசர் அவர்களுக்கு ஆபத்து வழி நடை இடையூறு ஏற்படாமல் பாதுகாக்கிறார்.

சுவாமி சரணம் ஐயப்பா