விருப்பம் நிறைவேற்றும் விசாலாட்சி தாயார் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்

30 January 2021, 5:00 am
Quick Share

சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவன் காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால் சிவன் காசி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சிவகாசி என்று சுருங்கியது. வடக்கே காசி , தெற்கே தென்காசி நடுவில் சிவகாசி உள்ளது. திருப்பதிக்கு முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே எழுத்தில் உள்ளது போல் இத்தலத்திற்கும் சிறப்பிருக்கிறது. குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோவில் ஒன்றை கட்டினான் அரிகேசரி பாராங்குச மன்னன்.

அங்கு பிரதிஷ்டை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனிதநீராடி காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு வந்தான். பலநாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வவனக் காடாக இருந்தது. மறுநாள் அவனுடன் வந்த அரசிக்கு பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. உடன் வந்த காராம் பசுவும் அவனுடன் வர மறுத்தது.

இதனால் சிலையை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வில்வ வனத்தடியிலேயே காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை மன்னன் பிரதிஷ்டை செய்தான். காசி விஸ்வநாதரின் பெயரால் சுவாமிக்கு விஸ்வநாதர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அரிகேசரி பாராங்குச மன்னனுக்கு பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள் இக்கோவிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், மற்றும் ரதவீதிகளை அமைத்தனர். சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில் பணிகள் 1445 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றதாக தகவல் இருக்கிறது.

Views: - 1

0

0