13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் : சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை..!

19 September 2020, 11:05 am
Csk - MI - match -1 - updatenews360
Quick Share

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியல் சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, பலத்த மருத்துவ பாதுகாப்புடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 10ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காகவே 8 அணியின் வீரர்கள், பயிற்சிகள், அணியின் ஊழியர்கள் என அனைவரும் கடந்த மாதம் இறுதியிலே அபுதாபி சென்றடைந்து விட்டனர். இந்த போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில், அபுதாபியில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, தோனியின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அந்த அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகியதால், தோனி எத்தனையாவது வீரராக களம் இறங்குவார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்திய மக்களுக்கு சற்று மனரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Views: - 3

0

0