2024 டி20 கிரிக்கெட் தான் என்னுடைய கடைசி போட்டி… பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 4:52 pm
warner - Updatenews360
Quick Share

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு … பிரபல கிரிக்கெட் வீரரின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அடுத்த வருடம் (2024) ஆம் ஆண்டு ஜனவரியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த டேவிட் வார்னர் ” வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி போட்டி.

இந்த பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கிறேன். எனவே, அதற்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் உள்ளது கிரிக்கெட் போட்டிகள் உள்ளது. நான் அதற்கு தான் இப்போது தயாராகி வருகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் ஐபிஎல் மற்றும் பிற சில ஃபிரான்சைஸ் லீக்குகளில் விளையாடுவேன், அதன் பிறகு ஜூன் மாதத்தில் (2024 டி20 உலகக் கோப்பை) விளையாடுவேன்.நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும், யாருக்குத் தெரியும், நான் திரும்பிச் சென்று நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஷீல்ட் கிரிக்கெட் (ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு கிரிக்கெட்) கூட விளையாடலாம்” என கூறியுள்ளார்.

மேலும், வார்னர் தற்போது இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கடுமையாக பயிற்சி எடுத்து தயாராகி வருகிறார். வரும் 7ம் தேதி இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 149

0

0