4வது டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் : வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் விடுவிப்பு..!!!

27 February 2021, 4:45 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. சென்னையில் நடந்த இரு போட்டிகள் மற்றும் அகமதாபாத்தில் ஒரு போட்டி என 3 போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சே கைகொடுத்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் 4ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில், இந்திய அணியில் ஒரு மாற்றமாக, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக புதிதாக எந்த வீரரையும் சேர்க்காததால், சிராஜ் களமிறக்க வாய்ப்பிருக்கலாம்.

Views: - 6

0

0