தந்தையின் கனவை நினைவாக்க அம்மாவிடம் இருந்து சிராஜுக்கு வந்த அழைப்பு!

18 January 2021, 3:31 pm
Siraj - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக தொடரில் சாதிக்கத் தனது தந்தையின் கனவை நினைவாக்கும் படி தன் அம்மா தொலைப்பேசி மூலம் தெரிவித்ததே மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்தது என சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆனால் இந்த தொடர் அவர் எதிர்பார்த்த அளவுக்கு எளிதான தொடராக அமையவில்லை. கடந்த நவம்பர் மாதம் தனது தந்தையை இழந்தார் சிராஜ். ஆனால் இந்திய அணியுடன் பயோ பபுள் பாதுகாப்பு முறையில் இருந்த சிராஜ், தனது தந்தையின் இறுதிச் சடங்குக்குச் செல்லவில்லை.

இதற்கிடையில் சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் போது இனரீதியான தாக்குதலுக்கும் ஆளானார் சிராஜ். தற்போது 4வது டெஸ்டில் சில ரசிகர்கள் சிலரின் பெயரைக் கத்தி அவரை கேலி செய்தனர். இதற்கிடையில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் இந்த தொடரில் அறிமுகமான சிராஜ் இந்திய அணியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முன்னின்று வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

கடினமான சவாலைச் மிக எளிதாகவே சிராஜ் எதிர்கொண்டார் எனலாம். தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் படி அவர் தாயின் போன் அழைப்பு தான் இந்த வெற்றிக்குக் காரணம் என தற்போது தெரிவித்துள்ளார், இது குறித்து சிராஜ் கூறுகையில், “நான் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது எனது தந்தையின் கனவும் கூட. தற்போது அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். ஆனால் அவரின் ஆசி என்னுடனேயே இருக்கிறது. இந்த போட்டிக்குப் பின் எனக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை” என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆனால் கடைசி சீசன் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட காரணத்தினால், இந்திய அணி வெறும் 1.5 அவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடிந்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் நான்கு ரன்கள் மட்டும் எடுத்த போது நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

ஆனால் பிரிஸ்பேன் மைதானத்தில் கடைசி நாளில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தவிர, கடந்த 1988 முதல் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்த எந்த டெஸ்டிலும் இதுவரை தோல்வியை ஆஸ்திரேலிய அணி தோல்வியைச் சந்தித்தது கிடையாது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நிலை உள்ளதால் இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

Views: - 8

0

0