டி-20 அரங்கில் 100 சிக்சர்கள் விளாசிய ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்!

5 March 2021, 3:40 pm
Quick Share

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 100 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார்.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று போட்டியின் முடிவில் நியூசிலாந்து 2 போட்டியில் வென்றது. மூன்றாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரு அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் அடித்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாகவே கைல் ஜேமிசன் 30 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


100 சிக்சர்கள்
ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் பின்ச்.

டாப்-5 வீரர்கள்
மேலும் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார் பின்ச். நியூசிலாந்தின் மார்டின் கப்டில் (135 சிக்சர்கள்), இந்தியாவின் ரோஹித் சர்மா (127 சிக்சர்கள்), இங்கிலாந்தின் இயான் மார்கன் (113 சிக்சர்கள்), நியூசிலாந்தின் கோலின் முன்ரோ (107 சிக்சர்கள்) மற்றும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் (105 சிக்சர்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

அதிகரன்கள்
தவிர இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆதிரேலியாவின் டேவிட் வார்னரை (2265 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி பின்ச் (2310 ரன்கள்) முதலிடத்திற்கு முன்னேறினார். பின்ச் 70 டி-20 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். வார்னர் 81 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 18 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

Views: - 1

0

0