டி20 உலகக்கோப்பை போட்டியில் டிவில்லியர்ஸ் இல்லை : தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி தகவல்..!!

18 May 2021, 7:39 pm
south africa ab devilliers - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் விளையாட மாட்டார் என்று தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு மே 23ம் தேதி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான தென்னாப்ரிக்கா அணியில் இடம்பெற டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இதனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணிக்காக டி20 தொடரில் விளையாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை. டிவில்லியர்ஸின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 495

0

0