ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டனான ரஷித் கான் : குஷியில் ரசிகர்கள்…!!

6 July 2021, 8:45 pm
Quick Share

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கும பி பிரிவில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது. தகுதிச் சுற்றின் அடிப்படையில் மேற்கொண்டு 2 அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் அவர் 2வது இடத்தில் இருக்கிறார். அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு துணை கேப்டனாக நஜிபுல்லா ஸத்ரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Views: - 411

0

0