மீண்டும் சீன நிறுவனத்தை ஐபிஎல் ஸ்பான்சராக்க பிசிசிஐ திட்டம்! கசிந்த தகவலால் அதிர்ச்சி..!!

28 January 2021, 7:49 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சராக விவோ நிறுவனத்தை மீண்டும் கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்தது. ஆனால் இந்தியா, சீனா இடையே நிலவிய மோசமான சூழல் காரணமாக விவோ நிறுவனம் பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தை நிறுத்தியது. இதையடுத்து 2020 தொடருக்கான ஸ்பான்சராக டிரீம் லெவன் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில், விவோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அமல்படுத்தும் போது விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அதில் ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. இதனால் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக மீண்டும் விவோ நிறுவனத்தை கொண்டு வர பிசிசிஐ முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு விவோ நிறுவனம் விலகிய காரணத்தால், பிசிசிஐக்கு ரூ, 217.80 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு காரணம் விவோ நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சராக ஆண்டுக்கு ரூ. 440 கோடி வீதம் கடந்த 2018இல் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் அடுத்தாண்டு (2022) தான் முடிவுக்கு வருகிறது.

ஒருவேளை இந்தாண்டு மற்றும் அடுத்தாண்ட் விவோ நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட மறுத்துவிடும் பட்சத்தில் பிசிசிஐக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும். ஆனால் தொடர்ந்து டிரீம் லெவன் அணி இந்த ஒப்பந்தம் முடியும் வரை ஸ்பான்சராக செயல்பட்டால் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 234 கோடி பிசிசிஐக்கு கிடைக்கும். இந்த காரணத்தினால் பிசிசிஐ விவோ நிறுவனத்தை மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டு வர கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பிசிசிஐ வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வீரர்கள் மினி ஏலத்தை நடத்தவுள்ளது. பிசிசிஐ விவோ நிறுவனத்தை மீண்டும் கொண்டு வர அனைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் விவோ நிறுவனம் சார்பாக இதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Views: - 22

0

0