இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்: இதிலும் தனித்துவமாகத் தெரிந்த ரிஷப் பண்ட்!

28 January 2021, 8:34 pm
Quick Share

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்த போதும் ரசிகர்கள் அந்த தொடரை மறப்பதாக இல்லை. இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் கையெழுத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இதற்கு காபா மைதானத்தில் அவர் அடித்த 89 ரன்களும் சிட்னி மைதானத்தில் அவர் அடித்த 97 ரன்களும் மிக முக்கிய காரணமாக அமைந்தது. இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் விளைவாக இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2 -1 எனக் கைப்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் புது சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இந்திய அணிக்கு எதிராக காபா மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே லியானின் இந்த சாதனைக்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட்டு அவருக்குப் பரிசாக அளித்து அந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கினார்.

இதற்கிடையில் தற்போது திடீரென அந்த ஜெர்சியின் போட்டோவை சமூகவலைத்தளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கினர். இதற்குக் காரணம் ரிஷப் பண்ட்டின் கையெழுத்தாகும். அந்த ஜெர்சியில் கையெழுத்திடும் போது கூடுதலாக ஒரு ஸ்மைலியை சேர்த்துப் பதிவிட்டிருந்தார் பண்ட். அதேபோல மற்றொரு இந்திய வீரரான மயங்க் அகர்வால் தனது கையெழுத்துடன் சேர்த்து ஒரு ஸ்மைலியை சேர்த்திருந்தார்.

ஆனால் ரிஷப் பண்ட்டின் கையெழுத்தை இந்திய அணி ரசிகர்கள் இதிலும் வித்தியாசமாக பண்ட் தெரிவதாகப் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் ரிஷப் பண்ட் கையெழுத்து அவரது எஸ்சி பிரிண்ட் பாதிக்கப்பட்ட பேட்டிலிருந்ததாக பேசிவருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களான புஜாரா, பிரித்வீ ஷா ஆகியோர் கையெழுத்தையும் ரசிகர்கள் ஆராய்ந்து வந்தாலும் பெரும்பாலானோர் பண்ட் பற்றித்தான் சமூகவலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் எனத் தெரிகிறது. இந்த தொடரிலும் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக பண்ட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் தான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் பண்ட் இடம் தெளிவாகக் காணப்படுகிறது.

Views: - 0

0

0