அம்பதி ராயுடு அடித்த அடியில் சுக்கு நூறாக பிரிட்ஜ் கண்ணாடி!

2 May 2021, 6:08 pm
Quick Share

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அம்பத்தி ராயுடு அடித்த சிக்ஸரில் கண்ணாடி உடைந்தத வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போலார்டு 87 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்தது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் மொயின் அலி மற்றும் டுளசி ஆகியோர் 108 ரன்கள் 2 விக்கெட்டுக்கு சேர்த்தது. இதனை தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து மிரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இதில் அம்பத்தி ராயுடு 4 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களை விளாசினார். இதில் ஒரு சிக்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரிட்ஜின் கண்ணாடியை பதம் பார்த்தது.

வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் இந்த சிக்சரை அடித்தார் அம்பத்தி ராயுடு. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக வீரர் அடித்த சிக்ஸசரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரிட்ஜ் உடைந்தது. முன்னதாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோவ் அடித்த சிக்சரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரிட்ஜ் கண்ணாடிகள் நொறுங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்ற போதும் நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்று 5 போட்டி வெற்றி இரண்டு தோல்விகளை சந்தித்து உள்ளது.

Views: - 123

0

0

Leave a Reply