சொல்லி வச்சு ஸ்மித்தை அஸ்வின் தூக்குவது எப்படி: சீக்ரெட்டை உடைத்த கவாஸ்கர்!

26 December 2020, 6:23 pm
ashwin - smith 1 - updatenews
Quick Share

உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சொல்லிவைத்து அவுட்டாக்கும் ரகசியத்தை கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு டெஸ்டில் பலத்த அடிவாங்கிய கையோடு களமிறங்கிய இந்திய அணி, மெல்போர்னில் புத்துணர்வுடன் ஆஸ்திரேலியாவும் பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் அடிலெய்டு, மெல்போர்ன் என இரு டெஸ்டிலும் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் சொல்லிவைத்தது போல ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுக்கவைத்து தூக்குகினார்.

இதன் விளைவாக ஸ்மித் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்நிலையில் அஸ்வின் எப்படி அவரின் விக்கெட்டை கைப்பற்றுகிறார் என்ற ரகசியத்தை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில்,“முதலில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு தாறுமாறாக எகிறியதைக் காண முடிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்டீவ் ஸ்மித்தை ஆஃப் சைடு திசையில் எந்தவிதமான ஷாட் அடிக்க முடியாத வகையில் அஸ்வின் மிடில் மற்றும் லெக் ஸ்டெம்ப்பிற்கு இடையே கச்சிதமாக பந்துவீசுகிறார்.

ஸ்மித் அவுட்டான விதத்தைப் பார்க்கும் போது அவர் முதல் ரன்னை எடுக்கும் நெருக்கடியில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதனால் அந்த பந்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்மித்திற்கு வீசிய அதே பந்தை லபுஷேனுக்கும் அஸ்வின் வீசினார். ஆனால் லபுஷேன் அதை தெளிவாகத் தோள்பட்டையில் இருந்து அழகாக சமாளித்து ஆடினார். இதை ஸ்மித் செய்ய தவறினார். இதை நான் அவரின் குறை என்று சொல்லவில்லை” என்றார்.

Views: - 24

0

0