ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற அஸ்வின்!

9 March 2021, 2:28 pm
Quick Share

கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாதம்தோறும் விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கான பட்டியலில் பிப்ரவரி மாதத்திற்கு, இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் இடம் பெற்றது.

இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கையில் மேயர்ஸ் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதில் கடந்த மாதம் (பிப்ரவரி) ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை இந்திய சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்ட அஸ்வின் சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். அதேபோல அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் 189 ரன்கள் எடுத்துள்ளார் அஸ்வின். தவிர, மொத்தமாக 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சிறந்த வீரருக்கான விருதைப் பெறுவதற்கு இவர் தகுதியான போட்டியாளர் என்பதை நிரூபித்துள்ளதோடு இந்த விருதை வென்று சாதித்துள்ளார் அஸ்வின். இந்நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) சிறந்த வீரர் விருதை இந்திய விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் வென்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் டாமி பியாமவுண்ட் வென்றார். இவர் கடந்த மாதத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மூன்று போட்டிகளிலும் அரைசதத்திற்கும் மேல் கடந்து அசத்தினார். மொத்தமாக 231 ரன்கள் அடித்து அசத்திய இவருக்குச் சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Views: - 46

0

0