ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் இந்தியா : தங்கம் வென்றார் இந்திய வீரர் சஞ்சீத்..!!

1 June 2021, 12:55 pm
sanjeet -updatenews360
Quick Share

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்று அசத்தினார்.

டெல்லியில் நடைபெறுவதாக இருந்த ஆசிய குத்துச் சண்டை போட்டி, கொரோனா தொற்று காரணமாக துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி வென்ற தங்கத்துடன் சேர்த்து இந்தியா 14 பதக்கங்களை வென்றிருந்தது.

இந்த நிலையில், ஆடவர் 91 கிலோ எடை பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சித், 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஸகஸ்தானின் வாஸ்ஸில்லியை எதிர்த்து விளையாடினார்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டி சஞ்சீத், 4-1 என்ற கணக்கில் வாஸ்ஸில்லியை தோற்கடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் 2 தங்கம் உள்பட 15 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாங்காங்கில் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 13 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

Views: - 401

0

0