ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ரூட் தேர்வு… சிறந்த வீராங்கனை யார் தெரியுமா..?

Author: Babu
13 September 2021, 7:26 pm
root century - updatenews360
Quick Share

கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் மற்றும் சிறந்த ஆட்டங்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளாக தேர்வு செய்து மாதாந்தோறும் விருதை ஐசிசி வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. அதில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பும்ரா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடியின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பெண்கள் பிரிவில் கேபி லூயிஸ், எமியர் ரிச்சர்ட்சன் மற்றும் நடாயா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், பெண்கள் பிரிவில் அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் எமியர் ரிச்சர்ட்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 340

0

0